01 Jul 2019 2:14 pmFeatured


தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு சென்ற ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18ம்தேதி நடைபெறுகிறது.
தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில் திமுக மூன்று உறுப்பினர்களையும், அதிமுக மூன்று உறுப்பினர்களையும் தேர்வு செய்து அனுப்பலாம். இந்நிலையில் திமுக சார்பில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். (வழக்கறிஞர் வில்சன் கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய நீதிமன்றத்தில் வாதாடி வெற்றியை தேடித்தந்தவரும், வழக்குகளில் வெற்றி பெற்று தந்தமைக்கு கலைஞர் அவர்களின் வாயால் வில்சன் அல்ல வின்-சன் என்றும் பாராட்டப்பட்டவருமாவார்.)
இதுகுறித்த அறிவிப்பை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தின்படி ஒரு இடம் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






Users Today : 22
Total Users : 106603
Views Today : 26
Total views : 434351
Who's Online : 0
Your IP Address : 216.73.216.1