18 Nov 2024 12:33 amFeatured

அனைத்து மும்பை அமைப்புகளின் அன்புமிக்க தோழமை விடைபெற்றார்
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் நிர்வாகக்குழுத் துணைச் செயலாளரும் அணுசக்திநகர் கலைமன்றத்தின் செயலாளருமான தேவராசன் புலமாடன் மார்பக சழித் தொல்லையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாகச் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று (16.11.2024) அன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.
இன்று (17.11.2024) நண்பகல் அணுசக்திநகரில் உள்ள நாலந்தா கட்டடத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு கோவண்டியிலுள்ள தகனமேடையில் வைத்து எரியூட்டப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழக மாநிலச் செயலாளர் அலிசேக் மீரான், இலெமூரியா அறக்கட்டளைத் தலைவர் சு.குமணராசன், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் வதிலை பிரதாபன், திராவிடக் கழகத் தலைவர் பெ.கணேசன், திராவிட முன்னேற்றக் கழக மாநில அமைப்பாளர் வசந்தகுமார், இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன், டோம்பிவிலி கிளைச் செயலாளர் வீரை சோ.பாபு, மனிதநேய மக்கள் கட்சி சங்கர் திராவிட், தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் முன்னணிப் பேச்சாளர் கவிஞர் பிரவினா சேகர், ஆரே.காலணி கிளைக் கழகப் பொறுப்பாளர் சிவக்குமார், கண்ணதாசன் தமிழ் இலக்கியப் பேரவை கவிஞர் சாந்தாராம், கவிஞர் இறை சா.ராஜேந்திரன், பத்திரிக்கையாளர் தமிழறம் இராமர், பெரியார் பாலா, அறச்செல்வன்,
மற்றும் அணுசக்தி நகர் கலை மன்றத்தினர் உட்ப்பட பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்களும், அரசியல் இயக்கங்களைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
அணுசக்தி கலைமன்றத் தலைவர் ந.கனகசபை இறுதிச்சடங்குப் பணிகளை முன்னின்று நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
அனைவரிடமும் அன்புமிக்க தோழமையாக தமது வாழ்வை அமைத்துக் கொண்டிருந்த தேவராசனுக்கு கண்ணீர் மல்க தமது இதயப் பூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
தேவராஜன் மறைவிற்கு தென்னரசு மின்னிதழ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது






Users Today : 25
Total Users : 106471
Views Today : 29
Total views : 434198
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37
A loss to the Tamil community of Mumbai
Deep condolences .