30 Jan 2021 3:11 pmFeatured

-பிரபு முத்துலிங்கம்
மும்பை
ஆம் அகிம்சை தான்
விடுதலை வேண்டி
உறவைத் துறந்து
அறை உடையுடன் அலைந்து
மண்ணில் அனைந்தேன்….
ஆம் அகிம்சை தான்
தென்னகத்தில் சுழன்ற
வளைத்தடியும்
தாய் மண்ணில் நடந்த
நீள் தடியும்
தட்டி எழுப்பியது
வெளிச்சம் காண……
ஆம் அகிம்சை தான்
மார்பில்
துளைத்த குண்டுகள்
மண்ணில் விதைத்த
குருதிகள்
உணர்ச்சிகள் அடக்கி
ஒற்றுமை காத்தது……
ஆம் அகிம்சை தான்
உழுபவன் கண்ணீர் சிந்த
உண்பவன் தூற்றினாலும்
விடியல் வருமென்று
இருகரம் கூப்பி
நிற்கின்றான்……
ஆம் அகிம்சை தான்
தூரங்கள் தொலைவாயினும்
பாரங்கள் சுமையாயினும்
பொறுமையில்
செழுமையாய்
பறந்திடும்
பட்டொளி வீசி
நிரந்தரமாய்……..
மனிதா
அகிம்சை யெனும்
அச்சாணியை வேராக்கு
உலகம் உற்றுநோக்கும்
நலமாய் தலைதூக்கும்
வளமாய் சீராக்கும்….!!!






Users Today : 66
Total Users : 105935
Views Today : 105
Total views : 433521
Who's Online : 1
Your IP Address : 18.97.14.90