12 Sep 2019 10:18 amEditorial

தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு ஏற்கெனவே முடிந்துள்ள நிலையில், பொங்கல் திருநாளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. ஜனவரி 10ஆம் தேதி பயணத்திற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. இதேபோல் ஜனவரி 11ஆம் தேதிக்கான முன்பதிவு நாளையும், ஜனவரி 12ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை மறுநாளும் தொடங்கும்.
ஜனவரி 13ஆம் தேதிக்கான முன்பதிவு வரும் 15ஆம் தேதியும், ஜனவரி 14ஆம் தேதிக்கான முன்பதிவு வரும் 16ஆம் தேதியும் தொடங்குகிறது. பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு மீண்டும் சென்னை,மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்ப வசதியாக ஜனவரி 19ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 20ஆம் தேதிக்கான முன்பதிவு வரும் 22ஆம் தேதியும் தொடங்கும்.






Users Today : 4
Total Users : 106614
Views Today : 4
Total views : 434363
Who's Online : 0
Your IP Address : 216.73.216.1