05 Aug 2019 1:11 amFeatured

தமிழர் தேர்வு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து பதவி வகித்து வந்த சுதாகர் ரெட்டி உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் ராஜினாமா செய்ததை தொடர்ந்து டெல்லியில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு கூட்டத்தில் பாராளுமன்ற மேலவை உறுப்பினரும் மூத்த தலைவருமான டி.ராஜாவின் பெயர் ஒருமனதாக முன்மொழியப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டை சேர்ந்த டி.ராஜா(70) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்து
ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமுகநீதி, மாநில கூட்டாட்சி உரிமைகள், தேசியக் கல்விக்கு எதிர்ப்புப் போன்ற அறப்போரில், நல்ல அரசியல் தள நாயகராக அவர் திகழ்வார் என்று நம்பி, தோழமையுடன் வாழ்த்துகிறோம். என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஏழை எளிய மக்களின் உரிமைகளை காக்க துணிச்சலான போராட்ட குணத்திற்கு சொந்தக்காரரான அவர் அரசியல் சட்டத்தின் அம்சங்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நேரத்தில் பொதுச் செயலாளரானது வரவேற்கத்தக்கது.
ஜனநாயகத்தின் அடித்தளத்தை யாரும் அசைத்திட முடியாதவாறு பாதுகாக்கும் பணியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
என திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
மும்பையில் பாராட்டு விழா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள டி.ராஜாவுக்கு மும்பையில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்வு 10.08.2019 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கிங்சர்க்கிள் காந்தி மார்க்கெட் அருகே உள்ள லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியில் வைத்து மும்பை செயலாளர் பிரகாஷ் ரெட்டி தலைமையில் நடைபெறுகிறது






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37