29 Jun 2019 10:39 pmFeatured

பருவ மழை தாமதமாக துவங்கினாலும் இரண்டு நாட்களாக பெய்துவரும் மழையால் மும்பை மக்கள் வெயில் கொடுமையிலிருந்து பெற்ற விடுதலையை அனுபவித்து மகிழச்சியடைய இயலாவண்ணம் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கன மழை தொடருவதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
பெய்த மழையால் தாமதமாக ஓடிய இரயில்கள், சாலை மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம், சாலைகளில் வாகன நெரிசல், சாலைகளில் முறிந்து விழுந்த மரங்கள் காரணமாக மும்பை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வெவ்வெறு இடங்களில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் பலியாகியுள்ளனர், குர்லா ஷகீனா மன்சில் கட்டிடத்தின் ஒருபகுதி மற்றும் ஜாக்ருதி நகரில் ஒரு வீடும் இடிந்து விழுந்துள்ளது. அந்தேரி சப்வேயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மரோல் பவானிநகரில் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு கார்கள் சேதமடைந்துள்ளது.
சயன் கோலிவாடா பஞ்சாப் காலினியில் மரம் சரிந்து விழுந்ததில் இரண்டு கார்கள் சேதமடைந்துள்ளன.

எல்பிஎஸ் மார்க்-காட்கொப்பர்-விக்ரோலி பகுதியில் மெட்ரோ மற்றும் மாநகராட்சி பணி காரணமாகவும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விரார் இரயில் நிலைய பிளாட்ஃபார்ம் எண்-3ல், இரயில் வந்து நிற்கும் இடத்தை தாண்டி பிளாட்ஃபார்ம் கடைசி பகுதியில் இடிந்துள்ளது,

அதிகபட்ச மழையாக காட்கொப்பரில் 280 மி.மீ, பவாயில் 164.60 மி.மீ, லோக்கண்ட்வாலவில் 137 மி.மீ, சாந்தாகுருஸில் 139.9 மி.மீ பதிவாகியுள்ளது






Users Today : 29
Total Users : 106610
Views Today : 33
Total views : 434358
Who's Online : 0
Your IP Address : 216.73.216.1