04 Sep 2020 10:42 pmFeatured

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக பொதுக்குழு மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நேற்று 03.09.2020 காலை நடந்தது.
கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, சென்னை மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், சிற்றரசு உள்ளிட்ட அனைத்து மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கிய மாவட்ட செயலாளர்களுக்கு கூட்டத்தில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் வருகிற 9ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதுவரை பொதுக்குழு கூட்டம் மிகப்பெரிய அளவில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பொதுக்குழு கூட்டம் கொரோனா பாதிப்பு காரணமாக காணொளி காட்சி வாயிலாக நடைபெறுகிறது.
பொதுக்குழுவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து காணொளி காட்சி வாயிலாக எவ்வாறு கூட்டத்தை நடத்துவது என்பது குறித்து கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
அதே நேரத்தில் வர உள்ள சட்டப்பேரவை தேர்தலை எவ்வாறு சந்திப்பது, வெற்றி வியூகம் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தேர்தலை சந்திக்கும் வகையில் கட்சியினர் ஒவ்வொருவரும் தங்கள் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். மக்களை சந்தித்து திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களிடம் விரிவாக எடுத்து சொல்ல வேண்டும். மக்களவை கவரும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கூறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.






Users Today : 44
Total Users : 120173
Views Today : 65
Total views : 451608
Who's Online : 0
Your IP Address : 216.73.216.173