01 Feb 2020 2:18 pmFeatured

வருகின்ற 3.2.2020 திங்கள் கிழமை அன்று மும்பை புறநகர் மாநில தி.மு.க கிளைக் கழகங்களில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 51 -ஆம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மும்பை புறநகர் மாநில திமுக துணைச் செயலாளர் அ.இளங்கோ அவர்கள் தலைமையில் ஜெரிமெரி கிளையிலும், ஜேம்ஸ் தேவதாசன் தலைமையில் பாண்டுப் கிளையிலும்,
இலக்கிய அணி புரவலர் சோப.குமரேசன் தலைமையில் கோரேகாவ் கிளையிலும், மெகபூப் பாட்சா தலைமையில் பீவண்டி கிளையிலும்,
வீரை.சோ.பாபு.தலைமையில் டோம்பிவிலி கிளையிலும்
வே.இராஜேந்திரன் தலைமையில் சீத்தாகேம்ப் கிளையிலும்,
ஆ.பாலமுருகன் தலைமையில் தானா கிளையிலும், சு.பெருமாள் தலைமையில் முலுண்ட் கிளையிலும், இரமேஷ் தலைமையில் ஜோகேஸ்வரி கிளையிலும், நம்பி தலைமையில் செம்பூர் கிளையிலும் பேரறிஞர் அண்ணா அவர்களின்
நினைவுதினம் கடைபிடிக்கப் படுகிறது.
கிளைக் கழக உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கிளைகளில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்யுமாறு மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.






Users Today : 59
Total Users : 120390
Views Today : 68
Total views : 451873
Who's Online : 2
Your IP Address : 216.73.217.141