26 Oct 2019 12:36 pmFeatured

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ-கலாமேரி தம்பதியரின் 2 வயது குழந்தையான சுர்ஜித் வில்சன் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள நிலத்தில் நடந்துசென்றபோது, பயன்பாடின்றி இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
அந்த ஆழ்துளை கிணற்றை மூடும்
வகையில், மேல்மட்டம் வரை மண்ணை கொட்டியிருந்த
போதிலும், தொடர்ந்த மழை காரணமாக ஆழ்துளை
கிணற்றை மூடியிருந்த மண் கீழே இறங்கியதாக
தெரிகிறது.
போலீஸார், தீயணைப்பு படை மற்றும் ஐந்து
மீட்புக் குழுக்கள் சிறுவனை மீட்பதற்காக போராடி
வந்தனர். ஆழ்துளாய் கிணற்றில் அதிகாலை வரை சிறுவன்
சுவாசித்துக்கொண்டிருப்பது
மீட்புக்குழுவுக்கு தெரிந்திருக்கிறது. இதனையடுத்து சிறுவனின் மேல் மணல் சரிந்ததால்
மீட்புப்பணியில் பின்னடைவு ஏற்பட்டதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் 17 மணிநேரமாக சிறுவன் ஆழ்துளாய் கிணற்றிலேயே
இருப்பதனால் சிறுவன் சோர்வுற்ற நிலையில்
எந்த அசைவும் இல்லாமல் இருக்கிறான்.
ஊர் மக்களில் தொடங்கி அனைவருமே சிறுவன்
பத்திரமாக வெளியே கொண்டுவரப்பட வேண்டும்
என்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
மகன் பத்திரமாக வருவான் என்ற நம்பிக்கையில்
சுர்ஜித்தின் தாய் மகனுக்காக தீபாவளிக்கு துணி தைத்துக்கொண்டிருக்கிறாறாம் இது அனைவரையும்
மனம் உருகச் செய்தது.
தற்போது சென்னையிலிருந்து வந்திருக்கும் ஒரு மீட்புக் குழு
சிறுவனின் மேல் சரிந்த மணலை
விலக்கி, இடுக்கி போன்ற கருவியை
வைத்து மீட்க முயற்சி செய்து
வருகிறது.
இந்நிலையில் நெய்வேலி என்.எல்.சி
நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிபவர்கள் கிருஷ்ணராவ் தலைமையில் ஒரு மீட்புக் குழு
அதிநவீன கருவியுடன்
திருச்சிக்கு விரைந்துள்ளது.






Users Today : 11
Total Users : 108824
Views Today : 11
Total views : 436860
Who's Online : 1
Your IP Address : 216.73.216.150