Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

தந்தை பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள் நூல் அறிமுக விழா-மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில்

30 Nov 2021 11:21 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள்  நூல் அறிமுக விழா -  28.11.2021 ஞாயிறு மாலை 6 மணி அளவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் அ.ரவிச்சந்திரன் வரவேற்புரையாற்ற, மும்பை திராவிடர் கழகத்தின் தலைவர் பெ.கணேசன் தொடக்கவுரையாற்றினார்.

மாதுங்கா எல்.கே.வாஜி மாநகராட்சி தமிழ் பள்ளியின் ஆசிரியர் சுசிலா தலைமை தாங்க தந்தை பெரியார்,புரட்சியாளர் அம்பேத்கர் மகாத்மா ஜோதிராவ் புலே ஆகியோரின் படங்களை முறையே கவிதாயினி புதியமாதவி, எழுத்தாளர் ஆனந்தி, மகிழ்ச்சி பேரவை வனிதா ஆகியோர் திறந்து வைத்தனர்.

சிறப்பு அழைப்பாளர் மராத்திய தமிழ் எழுத்தாளர் மன்றத்தைச் சார்ந்த செல்வி அவர்கள் பகுத்தறிவு பேராசான் தந்தை பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள் நூலை வெளியிட அரசி, பாக்கியலட்சுமி, பேரின்பவள்ளி, பத்மசிறி சரஸ்வதி ஆகியோர் நூலை பெற்றுக்கொண்டார்கள்.

கவிதாயினி புதியமாதவி , மகிழ்ச்சி மகளிர் பேரவையின் வளர்மதி, எழுத்தாளர் ஆனந்தி, வழக்கறிஞர் மஞ்சுளா, மகிழ்ச்சி மகளிர் பேரவையின் வனிதா, விழித்தெழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

இறுதியாக மராத்திய தமிழ் எழுத்தாளர் மன்றத்தைச் சார்ந்த செல்வி அவர்கள் பெண் ஏன் அடிமையானாள் நூலைப்பற்றி மிகவும் அருமையானாதொரு சிறப்புரையாற்றினார். நூலினை பெற்றுக்கொண்டவர்களுக்கு பல நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வேர்க்கடலை மற்றும் பருத்திப்பால் கொடுக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பெண் ஏன் அடிமையானாள் நூல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி பெண்களின் முழுமையான பங்களிப்புடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது . இறுதியாக மகிழ்ச்சி மகளிர் பேரவையின் முத்துலட்சுமி அவர்கள் நன்றி கூற நிகழ்ச்சி சிறப்பாக முடிவுபெற்றது.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

102440
Users Today : 36
Total Users : 102440
Views Today : 46
Total views : 427752
Who's Online : 0
Your IP Address : 18.97.14.81

Archives (முந்தைய செய்திகள்)