Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலிசுக்கு நினைவேந்தல்

04 May 2020 8:59 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் அவர்களின் மறைவு அவருடன் பழகிய நண்பர்களின் மனதில் ஓர் மாறாத வடுவாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் தனது பள்ளி படிப்பையும், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பட்டப்படிப்பையும், சென்னையில் மருத்துவ படிப்பையும், வெளிநாட்டில் மேல் படிப்பையும் முடித்து. பின்னர் சென்னையிலேயே மருத்துவமனையை தொடங்கி மருத்துவ சேவை செய்து வந்தவர் மருத்துவர் சைமன் ஹேர்குலிஸ்.

நான் படித்த வடக்கன்குளத்தில் அவரும் படித்தார். தடகள வீரராக அப்பொழுதே ஜொலித்தார். பின்னர் நான் ஆதித்தனார் கல்லூரியில் படிக்க சேர்ந்த போது அதே கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார். ஒரே கல்லூரி விடுதியில் தங்கி படித்ததால் பல நேரங்களில் சந்திக்க பேச வாய்ப்பு. பக்கத்து ஊர்காரர் என்ற ஒரு நெருக்கம். எனக்கு சீனியர் என்ற முறையில் நன்றாக படிக்கச்சொல்லி அறிவுறுத்தல்.

நான் அவரை எட்டி நின்று பார்த்தாலும் பழக இனிமையானவர், அதிகம் பேசாதவர் அனைவரது பாராட்டுக்கும் உரியவர்.

சிறந்த தடகள வீரர், தலை சிறந்த மருத்துவர் அவரது மறைவுக்கு தென்னரசு குழுமத்தின் சார்பிலும் அவருடன் நெருங்கி பழகிய நண்பர்களின் சார்பிலும் புகழ் அஞ்சலி

-வே.சதானந்தன்
முதன்மை ஆசிரியர், தென்னரசு

(மருத்துவர் சைமன் உடன் ஆதித்தனார் கல்லூரி விளையாட்டு வீரர்கள்)

மருத்துவர் சைமன் அவர்களுக்கு அவரது நண்பர்களின் புகழ் அஞ்சலி

S.D.Sundaresan I.A.S.
Secretary To Govt. Pudhucherry (Information and Publicity)
Special Secretary To Lt. Governor Pudhucherry
Special Secretary to Home At Govt.Of  Pudhucherry

சென்னையில் கடந்த 19.04.2020 அன்று கோவிட்-19 கொரோனா வைரஸின் தாக்குதல் காரணமாக மரணம் அடைந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் அவர்களைப் பற்றிய செய்தி எனக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தருகிறது.

அவர் எனது கல்லூரி கால நண்பர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூருக்கு அருகில் உள்ள வடக்கன்குளத்தை சேர்ந்தவர்.

திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் கல்லூரியில் பி.எஸ்.சி உயிரியல் படித்து முடித்தவுடன் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்தார். அதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள ஸ்டேன்லி மெடிக்கல் கல்லூரியில் எம்.எஸ் முடித்தார். பிறகு மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.ஸி.ஹெச் அதன்பிறகு யூ.கே யில் உள்ள எடின்பர்க்கில் எப்.ஆர்.சி.எஸ் என தொடர்ந்து மருத்துவம் சார்ந்த பல படிப்புகளை முடித்தார்.

இயல்பாகவே மிகுந்த அமைதியும் ஆற்றலும் நிறைந்த டாக்டர் சைமன் படிப்பு மற்றும் விளையாட்டு என இரண்டிலுமே மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டு சிறந்து விளங்கினார்.

நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு போட்டிகளில் வெல்வதுவும் பரிசுகளைப் பெறுவதும் அவருக்கு மிகவும் உகந்த ஒன்று.

தற்போது வரை சொந்தமாக 'தி ந்யூ ஹோப் மெடிக்கல் சென்டர்' என்ற பெயரில் ஒரு மருத்துவமனையை நடத்திக் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அங்கே வந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரால் டாக்டர் சைமனும் பாதிக்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே!

இதிலிருந்து நாம் அறியக் கூடிய உண்மை என்னவென்றால் இந்த கோவிட்-19 என்ற நோய் தொற்று எத்தனைக் கொடூரமானது என்பதை நம்மக்கள் புரிந்து கொள்ளத் தவறுகிறார்களே! என்று வருத்தப்பட வேண்டியதுள்ளது.

ஏழை, பணக்காரன், வலிந்தவன், மெலிந்தவன் என்று எவ்வித வேறுபாடும் கருதாது அனைவருக்கும் தொல்லையைக் கொடுக்கக்கூடிய இந்த கொரோனா நோய்த்தொற்று பல வகைகளில் அழிக்கும் வல்லமை பெற்றது.

டாக்டர் சைமன் அவர்களுக்கு ஒரு மனைவியும் மகன், மற்றும் மகளும் உள்ளனர்.

அவரது இறப்பு அவரது குடும்பத்துக்கு மட்டுமல்லாது சொந்த பந்தங்கள் மற்றும் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் குறிப்பாக மருத்துவத்துறை நண்பர்கள் அனைவருக்கும் பெரிய இழப்பாக ஆகிவிட்டது. எனவே எனது நண்பரின் இழப்பில் நானும் பெரிதும் மனம் வருந்துகிறேன்.

எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த நோய்தொற்று மிகக் கொடூரமான ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒன்று என்பதை மக்கள் உணரவேண்டும்; ஒருவர் மற்றவருக்கிடையான சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்; அதன்மூலம் இந்தக் கொடிய தொற்றிலிருந்து நம்மை நாமே காத்துக்கொள்ள முடியும் என்று அறிய வேண்டும்.

மருத்துவத் துறை மூலமாக மக்கட்பணியில் தமது வாழ்வை ஒப்படைத்திருந்த எனது நண்பனின் மறைவை எண்ணி வருந்துகின்றேன். அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காகவும்  இறைஞ்சுகின்றேன்.

P.Mohandoss,
Assistant Commissioner Of Police, Chennai.

டாக்டர் சைமன் ஹெர்குலிசை பள்ளி பருவத்தில் இருந்தே நான் அறிவேன். 1980ம் ஆண்டு மாவட்ட மற்றும் மாநில அளவிலான பள்ளி போட்டிகளில் நாங்கள் கலந்துகொள்ளும் போது சக விளையாட்டு வீரர்களுள்ளான நட்பு அது.

சைமன் ஹெகுலிஸ் வடக்கன்குளம் புனித தெர்சாள் பள்ளியில் படித்துக்கொண்டிந்தார், நான் வள்ளியூரில் படித்துக்கொண்டிருந்த சமயம் அது.

நல்ல ஒரு தடகள வீரராவார். பள்ளி பருவத்தில் ஓட்ட பந்தயத்தில் மாநிலத்தில் அளவிலான பள்ளி மாணவர்களுக்கான 100 மீட்டர் போட்டியில் முதல் பரிசு வென்றவராவார் (JUNIOR STATE FIRST)

பின்னர் 1982ல் திருச்செந்தூர்-வீரபண்டீயன் பட்டினம் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் பட்டபடிப்புக்காக சேர்ந்த பொழுது அவரும் அதே கல்லூரியில் சேர்ந்திருந்தார். கல்லூரி மெய்ன் ஹாஸ்டலில் ஒரே அறையில் நான், சைமன் மற்றும் அப்பாசாமி என்ற என்ற விளையாட்டு வீரரும் தங்கியிருந்தோம்.

100,200 மீட்டர் ஓட்ட தடகள வீராவார், மதுரை காமராசர் பல்கலை கழகத்தின் Zone  போட்டிகளிலும் மற்றும் பல்கலை போட்டிகளிலும் கலந்து பரிசுகளை வென்றவராவார். விளையாட்டில் மட்டுமின்றி படிப்பிலும் சிறந்து விளங்கியவராவார். பி.எஸ்.சி உயிரியல் படித்துவந்த அவர் பல்கலை கழகத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.

பண்பானவர், மென்மையான குணம் கொண்டவர் சூதுவாது அறியாத வெகுளித்தனமான மனம் கொண்டவர். பழகுவதில் இனிமையானவர்.

கல்லூரியில் பி.எஸ்.சி முடித்தவர் பின்னர் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ், அதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ்.பிறகு மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.ஸி.ஹெச் அதன் பின் வெளிநாட்டில் எப்.ஆர்.சி.எஸ் என படிப்புகளை முடித்திருக்கிறார்.

பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் NEW HOPE மருத்துவமனையை சிறப்பாக நடத்திவந்தார். . நரம்பியல் மருத்துவத்தில் நிபுணராக சிறந்து விளங்கினார் நானும் தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சென்னைக்கு வர எங்கள் சந்திப்புகள் தொடர்ந்தது

மருத்துவ பணியிலும் சிறந்து விளங்கியதோடு, பலருக்கு சலுகை கட்டணத்தோடும், தேவைபடுவோருக்கு இலவச சிகிச்சையும் அளித்துவந்த மனிதாபிமானம் மிக்க ஒருவராவார். அத்துடன் தனது தந்தையின் பெயரில் அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் பல மருத்துவ முகாம்களை நடத்தி வந்ததோடு பல உதவிகளையும் செய்துவந்தார். அவர் குணம் போலவே அவருக்கு மனைவியும் அமைந்தார் என்பது மேலும் சிறப்புக்குரியது.

கொரோனா தொற்று உலகெங்கிலும் மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த தருணத்திலும் அவர் கடமையென தனது மருத்துவ பணியினை மேற்கொண்டு வந்தார். அதுவே அவருக்கு எமனாக அமைந்தது. சிகிச்சைக்கு வந்த யாராலோ அவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு அதனால் அவர் உயிர் இழந்தார்.

எந்த பகுதி மக்களுக்காக அவர் பாடுபட்டரோ சேவை செய்தாரோ. அந்த பகுதி மக்களே அவர் என்று அறிந்தோ அறியாமலோ அவர் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தனர் என்பதுதான் வேதனைக்குரிய விசயம்.

ஒரு நல்ல படிப்பாளி,நல்ல தடகள வீரர், நல்ல மருத்துவர் அனைத்துக்கும் மேலாக நல்ல ஒரு மனித நேயம் கொண்ட மனிதரை இழந்துள்ளோம்.

நான் ஒரு நல்ல நண்பனை  இழந்துள்ளேன். அவர் ஆன்மா அமைதி கொள்ளட்டும்

Dr.S.Prabahar M.A.,M.A.,(JMC) M.Phil.,Ph.D
Dean, M.S. University, Tirunelveli

Dr. சைமன் ஹெர்குலிஸ் கல்லூரியில் எனக்கு சீனியர். என்னோடு ஹாஸ்டலில்  தங்கியிருந்தவர். அவர் ஒரு சிறந்த மாணவர், விளையாட்டு வீரர் , கண்ணியம் மிக்கவர். அவர் இழப்பு மிகுந்த மனவேதனையத் தருகிறது. அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Civil Shall We Be…

Through no fault of him,
He died of serving others.
Saved many lives,
Until he had one of his own.

Yet, doesn’t have space
For a decent burial.

An athlete, a civilizing stature,
Of physical prowess.
He, who treated the patients,
By their spiteful ignorance,
Dearth of gratitude and compassion
Was plaited with a crown of pestilence.
The dead man’s destiny!

A dead won’t sneeze or cough
Of another’s death.
Fear spreads fear,
Robs of all the good from heart.

Alone, he buried his friend,
A lead mourner to lamentation,
At the loss of sanity.

A Burial of the Blood.
May the earth not receive the people,
With a fear of being unburied,
Not him, but We who are dead.

Thangamani .R
Senior Audit Officer..ID&AD, C&AG Office,
National Referee- Volley Ball

எங்கள் அன்பு நண்பர் எங்கள் ஆதித்தனார் கல்லூரியின் Herculean Sprinter (வலிமை மிக்க தடகள வீரர்) மருத்துவர் சைமன் ஹெர்குலிசின் மறைவு எங்களை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

1982-1885 கல்வியாண்டுகளின் ஆதித்தனார் கல்லூரி விளையாட்டு வீரர்களாகிய எங்களால் காரல் லூயிஸ் (Karl lewis- USA, World’s Fastest Sprinter) என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் மருத்துவர் சைமன்.

அமைதியான குணம் கொண்டவர்,விளையாட்டு,படிப்பு பின்னர் மருத்துவத் துறை அனைத்திலும் சிறப்பாக விளங்கியவர் அவரது மறைவு துரதிஷட்மானது அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Dr. D.S. Mahendran, M.Sc., M.Phil., P.B.D.C.S.A., Ph.D
The Principal,
Aditanar College Of Arts and Science,
Thiruchendur.

மருத்துவர் சைமன் எங்களது ஆதித்தனார் கல்லுரியில் பி.எஸ்.சி உயிரியல் (1982-1985) படித்து வந்தார். கல்லூரி மெயின் விடுதியில் தங்கி படித்துவந்த அவர் வடக்கன்குளத்தைச் சார்ந்தவராவார். சிறந்த தடகள வீரராவார். அதேநேரம் கல்வியிலும் சிறந்து விளங்கினார், பல்கலைக் கழக தரவரிசை மாணவராக தேர்ச்சி பெற்றார் (University Rank)

மென்மையாக அதேநேரம் நகைச்சுவையாகவும் பேசும் குணமுடையவர்,

ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி ஆண்டு விழாக்களின் போது கல்வி மற்றும் விளையாட்டுகளுக்கான பரிசுகளை வென்று வந்தார். கல்லூரி விடுதியில் அவர் ”பேபி” என்று செல்லமாக அழைக்கப்பட்டார். காரணம் அவரது குழந்தை போன்ற அவரது குணத்திற்காக.

அவரது ஆன்மா இளைப்பாரட்டும்

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092649
Users Today : 27
Total Users : 92649
Views Today : 33
Total views : 410392
Who's Online : 0
Your IP Address : 3.128.33.243

Archives (முந்தைய செய்திகள்)