Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் 23-வது ஆண்டு விழா, கலை இலக்கிய பொங்கல் பெருவிழா, நூல் வெளியீடு மற்றும் விருதுகள் வழங்கும் விழா

21 Jan 2023 2:00 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Pictures award function

மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் 23-வது ஆண்டு விழா, கலை இலக்கிய பொங்கல் பெருவிழா, நூல் வெளியீடு மற்றும் விருதுகள் வழங்கும் விழா பாண்டுப் மேற்கு வில்லேஜ் ரோட்டில் உள்ள பிரைட் மேல்நிலைப்பள்ளியில் 22-01-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் பாவரசு வதிலை பிரதாபன் தலைமை தாங்குகிறார். துணைத்தலைவர் கவிமாமணி இரஜகை நிலவன் வரவேற்புரையாற்ற, பொதுச்செயலாளர் கல்வியாளர் அமலா ஸ்டான்லி தொடக்கவுரையாற்றுகிறார்.

தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலவாரிய உறுப்பினர் அலிசேக் மீரான், தமிழ் எழுத்தாளர் மன்ற புரவலர் சேதுராமன் சாத்தப்பன் ஆகியோர் பாராட்டுரை நிகழ்த்துகின்றனர். தமிழ் எழுத்தாளர் மன்ற நிர்வாகக் குழு செயலாளர் வே. சதானந்தன் நன்றியுரையாற்ற உள்ளார்.

தமிழ் எழுத்தாளர் மன்ற பேச்சாளரணி செயலாளர் சொற்போர் திலகம் புவனா வெங்கட், முன்னணி பேச்சாளர் நற்றமிழ் நாவரசி பிரவீனா சேகர், கலைப்பிரிவு பாடகி இசையமுது வாணிஸ்ரீ வேணுகோபால் ஆகியோர் நெறியாளுகையை கையாள்கின்றனர்.

இன்னிசை நிகழ்ச்சி

காலை 11 மணிக்கு சமாரியா இசைக்குழு சென்னை மற்றும் தமிழ் எழுத்தாளர் மன்றக் கலைப்பிரிவு இணைந்து வழங்கும் ’தமிழிசைப் பாடல்கள்’ இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பட்டிமன்ற மன்ற நடுவராக புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி பேராசிரியர் முனைவர் மு. பாலசுப்ரமணியன் கலந்து கொள்கிறார். சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் நா. ஞானம் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.

நூல்கள் வெளியீடு

தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் ச.பிரியா எழுதிய உயிரின் நிழல், இதயக் கருவறை நுல்கள் வெளியிடப்படுகிறது. இந்த நூல்களை மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் பாவரசு வதிலை பிரதாபன் வெளியிடுகிறார்.

’உயிரின் நிழல்’ என்ற நூலை தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் முன்னணி பேச்சாளர் நற்றமிழ் நாவரசி பிரவீனா சேகர் பெற்றுக் கொள்கிறார்.

‘இதய கருவறை’ என்ற நூலை வேல்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் கி. துர்கா தேவி மற்றும் பேராசிரியர் முனைவர் பன்னிருகை வடிவேலன் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.

கவியரங்கம்

பகல் 12 மணிக்கு வள்ளுவத்தால் வெல்வோம்… பொங்கல் விழா கவியரங்கம் நிகழ்ச்சி சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் பன்னிருகை வடிவேலன் தலைமையில் நடைபெறுகிறது.

அன்புடைமை, அறிவுடைமை, பண்புடைமை,நன்றியுடைமை, நாணுடைமை, ஊக்கமுடைமை பொருளில் கவியரங்கம் நடைபெற உள்ளது.

அன்புடைமையால்… என்ற தலைப்பில்
தமிழ் எழுத்தாளர் மன்ற நிர்வாகக் குழு துணைப் பொருளாளர்
கவிஞர் வெங்கட் சுப்ரமணியன்

அறிவுடைமையால்… என்ற தலைப்பில்
சென்னை புனித தோமையார் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்
முனைவர் தேவகி ,

பண்புடைமையால்… என்ற தலைப்பில்
தமிழ் எழுத்தாளர் மன்ற ஆலோசகர்
பாவலர் முகவை திருநாதன்

நன்றியுடைமையால்... என்ற தலைப்பில்
சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் பேராசிரியர்
முனைவர் கி.துர்காதேவி

நாணுடைமையால்… என்ற தலைப்பில்
சென்னை வேல்ஸ் பல்கலைக் கழக பேராசிரியர்
முனைவர் ச. பிரியா

ஊக்கமுடைமையால்... என்ற தலைப்பில்
தமிழ் எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர்
கவிமாமணி இரஜகை நிலவன்
ஆகியோர் கவிதை வாசிக்கின்றனர்

பட்டிமன்றம்

ஏர்முனைப் பாடல்களில் விஞ்சி நிற்பவர்
கவியரசு கண்ணதாசனா!
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமா!
மக்கள் கவிஞர் மருதகாசியா!

என்ற பட்டி மன்றம் பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது.

கவியரசு கண்ணதாசனே! என்று
பேராசிரியர் முனைவர் கி.துர்காதேவி
நற்றமிழ் நாவரசி பிரவீனா சேகர் ஆகியோரும்,

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமே! என்று
உரைத் தென்றல் கி.வேங்கட்ராமன்
பேச்சாளர் மீனாட்சி முத்துகுமார் ஆகியோரும்

மக்கள் கவிஞர் மருதகாசியே! என்று
சொற்போர் திலகம் புவனா வெங்கட்
நற்றமிழ் நாவலர் செல்வி ராஜ் ஆகியோரும் வாதிடுகின்றனர்.

விருதுகள் வழங்கல்

கலை, இலக்கியம் மற்றும் சமூகப் பணிகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டும் நிகழ்வு நடைபெறுகிறது.

கல்வித்தந்தை தேவதாசனார் விருது

பேராசியர் முனைவர் மு. பாலசுப்ரமண்யன், டி.என் முத்துகிருஷ்ணன், கல்வியாளர் அமலா ஸ்டேன்லி, டி.அப்பாதுரை ஆகியோருக்கு கல்வித்தந்தை ’தேவதாசனார் ’விருதும்,

சீர்வரிசை சண்முகராசனார் விருது

இலக்கியச் செல்வர் வெ.பாலு, திரு எஸ்.இராமதாஸ், கவிதாயினி புதிய மாதவி, கருவூர் இரா. பழனிச்சாமி, வழக்கறிஞர் க. கணேசன் ஆகியோருக்கு ‘சீர்வரிசை சண்முகராசனார்’ விருதும்

பேராசிரியர் சமீரா மீரான் விருது

பாவலர் முகவை திருநாதன், சமூக ஆர்வலர் கே.வி அசோக்குமார், பேராசிரியர் முனைவர் பன்னிருகை வடிவேலன், பேராசிரியர் முனைவர் கி.துர்காதேவி, பேராசிரியர் முனைவர் தேவகி, பேராசிரியர் முனைவர் ச.பிரியா, கவியருவி சமாரியா, அ.இரவிச்சந்திரன், கு மாரியப்பன், ந.ஞானம், கவிஞர் வ.ரா தமிழ்நேசன், வே.சதானந்தன், கவிமாமணி இரஜகை நிலவன், ஜெயா ஆசீர், லெ.பாஸ்கரன், தேவராசன் புலமாடன், வெங்கட் சுப்ரமண்யன், டி.எம்.எஸ் நரசிம்மன், ஆர்.டி ராஜன், ஆகியோருக்கு பேராசிரியர் சமீரா மீரான் விருதும்,

இலக்கிய விருது

தமிழருவி புவனா வெங்கட், தமிழருவி செல்வி ராஜ், உரைத்தென்றல் கி.வேங்கடராமன், கருத்தருவி பிரவீனா சேகர், இசையமுது வாணிஸ்ரீ வேணுகோபால் ஆகியோருக்கு இலக்கிய விருதுகளும் வழங்கப்படுகின்றது.

காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் 23-வது ஆண்டு விழா, கலை இலக்கிய பொங்கல் பெருவிழா, நூல் வெளியீடு மற்றும் விருதுகள் வழங்கும் விழாவில் தமிழர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி தமிழ் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

You already voted!
4 4 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092554
Users Today : 14
Total Users : 92554
Views Today : 44
Total views : 410256
Who's Online : 0
Your IP Address : 3.134.85.36

Archives (முந்தைய செய்திகள்)